மின் வெட்டு குறித்த அறிவிப்பு

மின் வெட்டு குறித்த அறிவிப்பு

நாட்டில் இன்றும் (13) மின்சாரம் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என  இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மின் வெட்டு குறித்த அறிவிப்பு | Power Outage Announcement Ceylon Electricity Boardஅதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை  இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தது.

இதன்படி, I,J,K,L ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் 5.30க்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு 6 மணி முதல் 6.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

இன்றைய மின்வெட்டு அட்டவணை வெளியானது | Today S Power Outage Schedule Released

R,S,T,W,U,V ஆகிய வலயங்களில் மாலை 6 மணி முதல் 6.30க்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு மாலை 7 மணி முதல் 7.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

A,B,C,D,P,Q ஆகிய வலயங்களில் மாலை 7 மணி முதல் 7.30 முதல் வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 8 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

E,F,G,H ஆகிய வலயங்களில் இரவு 8 மணி முதல் 8.30 வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 9 முதல் 9.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

மின் வெட்டு குறித்த அறிவிப்பு | Power Outage Announcement Ceylon Electricity Boardஅதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணி நேரத்திற்குள் 4 பிரிவுகளாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இருப்பினும், நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது, ​​நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பராமரிப்புப் பணிகள் பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.