யாழில் மன விரக்தியடைந்த ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு..!

யாழில் மன விரக்தியடைந்த ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு..!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (03.02.2025) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார். 

80 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளதுடன், இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். 

கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.