ஃபெமினிலி டி பலேர்மோ: கிறிஸ்டீனா பிளிஸ்கோவாவிடம் மரியா சக்கரி அதிர்ச்சி தோல்வி!

ஃபெமினிலி டி பலேர்மோ: கிறிஸ்டீனா பிளிஸ்கோவாவிடம் மரியா சக்கரி அதிர்ச்சி தோல்வி!

பெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், முதல் சுற்றில் கிறிஸ்டீனா பிளிஸ்கோவா வெற்றிபெற்றுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் கிறிஸ்டீனா பிளிஸ்கோவாவும், கிரேக்கத்தின் மரியா சக்கரியும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டில், ஆக்ரோஷமாக விளையாடிய கிறிஸ்டீனா பிளிஸ்கோவா, செட்டை 6-4 என கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், அதே ஆக்ரோஷத்துடன் விளையாடிய கிறிஸ்டீனா பிளிஸ்கோவா, 6-4 என செட்டைக் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.