தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவி
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதேவேளை, 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார்.