உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு

உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு

  கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு | A Level Student Dies Due To Unfortunate Inccident

குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.