போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு அரச காணி விற்னை; வவுனியா உத்தியோகஸ்தர் மோசடி

போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு அரச காணி விற்னை; வவுனியா உத்தியோகஸ்தர் மோசடி

போலி ஆவணம் தயாரித்து அரச காணி ஒன்றினை 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு அரச காணி விற்னை; வவுனியா உத்தியோகஸ்தர் மோசடி | Vavuniya Official Fraud Selling Government Land

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான அரச உத்தியோகத்தரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.