5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர்

5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர்

 இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர் | Jaffna Man Betrays Immigration Officer

குறித்த முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்காக, அதே நிலையத்தில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே குறித்த தொகையை இலஞ்சமாக கோரியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த நிலையத்தில் உள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.