அஸ்வெசும கொடுப்பனவு குறித்து நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  இன்று (21) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் விரிவான மீளாய்வை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இன்னும் நிவாரணம் கிடைக்காத தகுதியுள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

நிவாரண உதவி செயல்முறையை மேம்படுத்த, கணினி மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு | Govt Announcement About Aswesuma Allowance

கணிசமான எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து முறையீடுகள் பெறப்பட்டுள்ளன, அவை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படும்.

2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நலன்புரி நலன்களுக்காக ஒரு பெரிய ஒதுக்கீட்டை ஒதுக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அமைப்பில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது” என தெரிவித்தார்.