
தேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்
நுவரெலியாவில் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 10 சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் (ஆசிரியர்கள்) நீக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ரோஹன புஸ்பகுமார மேலும் கூறியுள்ளதாவது, “இந்த அதிகாரிகள் 10பேரும் அரசியல் கட்சியொன்றின் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அவர்களை தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.