கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கடவுச்சீட்டை பெறுவதற்கு பெருமளவான மக்கள் சுமார் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக அமைச்சரிடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில் யாராவது அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், கடவுச்சீட்டை பெறுவதற்கு தனியான பிரிவொன்று திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு | New System For Passport Issue In Sri Lanka

அந்த கவுண்டரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை சிறப்பு குழுவொன்று பரிசீலனை செய்து விரைவில் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.