விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கியில் வைப்பிலிடப்படவுள்ள கொடுப்பனவு

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கியில் வைப்பிலிடப்படவுள்ள கொடுப்பனவு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

2024/25 பெரும்போக பயிர் சேத ஆய்வின் முன்னேற்றம் குறித்து இன்று (26) ஊடகங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2024/25 பெரும்போகத்தில் 2024 நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணி தற்போது விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பங்களிப்புடன் செய்யப்படுகிறது.

இவற்றில் பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சேத ஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கியில் வைப்பிலிடப்படவுள்ள கொடுப்பனவு | Gov Deposits Money In The Bank For Farmers

அந்த மாவட்டங்கள் தொடர்பான இறுதி அறிக்கைகள் கிடைத்த பின்னர் இழப்பீடுகள் வழங்கப்படும் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 29ஆம் திகதிக்குள் பயிர்ச் சேதங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளையும், அனுராதபுரம், குருநாகல், மாத்தளை மாவட்டங்களில் பயிர்ச் சேதங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளை டிசம்பர் 30ஆம் திகதிக்குள் முடிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.