நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (25) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, மதுவரி திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த காலப்பகுதியில் விதிகளை மீறும் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மதுவரி ஆணையாளர் நாயகம் உதயகுமார தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024