தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அண்மையில் சடுதியாக குறைவடைந்த தங்க விலை நேற்று (01) அதிகரித்த நிலையில் இன்று (02) மீண்டும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய (02.01.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 774,833 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,340 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 218,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம் | Today Gold Rate In Sri Lanka World Market

 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,930 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 210,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம் | Today Gold Rate In Sri Lanka World Market

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 194,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.