ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்கான கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்கான கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம்  இன்று (19.12.2024) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை கடந்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் அதற்கான கடனுதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த கடன் தொகையை பயன்படுத்தி நாட்டின் மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பல அத்தியாவசிய திட்டங்களை மேற்கொள்ள மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க திட்டங்களின் அமைப்பில் சேர்க்கும் வகையில் பல அத்தியாவசிய டிரான்ஸ்மிஷன் லைன் திட்டங்களும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.