விபத்தில் புதுமண தம்பதி உயிரிழப்பு; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
விபத்தில் புதுமண தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பத்தனம்திட்டாவைச் சேர்ந்த நிகில், அனு இருவரும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு மலேசியா சென்ற தம்பதியினர், இன்று அதிகாலை திருவனந்தபுரம் திரும்பியுள்ளனர்.
புதுமண தம்பதியை பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் காரில் அழைத்து வந்துகொண்டிருந்தனர். பத்தனம்திட்டாவில் கோநி என்ற இடத்தில் கார் எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர்.
டிரைவர் தூங்கியது விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வீதிபத்தில் புமண தம்பதிகள் உயிரிழந்துள்ளமை உறவினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.