அடுத்தாண்டுக்கான பாடசாலை செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்தாண்டுக்கான பாடசாலை செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் முதல் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை முதற் கட்டம் இடம்பெறும

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இரண்டாம் கட்டம் இடம்பெறும்.

அடுத்தாண்டுக்கான பாடசாலை செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு | 2025 School Term Timetable Released

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணையானது மே மாதம் 14ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை முதலாம் கட்டம் இடம்பெறவுள்ளது.

நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.