இலங்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்படும் கடவுச்சீட்டு கையிருப்பு நெருக்கடி

இலங்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்படும் கடவுச்சீட்டு கையிருப்பு நெருக்கடி

இலங்கையில், தற்போதுள்ள 750,000 கடவுச்சீட்டுகள் அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் முடிவடையவுள்ளன.

இதனை தொடர்ந்து தினசரி வழங்கல் வீதத்தைப் பொறுத்து, மீண்டும் வெற்றுக் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில்  அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டியுள்ளது.

எனினும் இதற்காக கேள்விப்பத்திரங்களை கோருவதில்  உண்மையான சிக்கல் இருப்பதை, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஒப்புக்கொண்டார்.

முன்னதாக, e கடவுச் சீட்டுக்களுக்கான  கேள்விப்பத்திர முடிவு - Thales DIS Finland OY மற்றும் அதன் இலங்கைப் பங்காளியான Just In Time (JIT) Technologies (Pvt) Ltd ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.

எனினும்,  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், அதே விநியோகஸ்தர்களிடம் இருந்து மற்றொரு விநியோகத்தை பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இலங்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்படும் கடவுச்சீட்டு கையிருப்பு நெருக்கடி | Sri Lanka Passport Queue

இந்த நிலையில், அதனை தவிர்த்து, புதிய பதிப்பு பெறப்படுமானால் அது, இன்னுமொரு தொடராக இருக்கும், இந்த ஆண்டு அக்டோபரில் N வரிசை படிப்படியாக நீக்கப்பட்டு,  இலங்கையின் கடவுச் சீட்டுக்கள் தற்போது பி-வரிசையில் உள்ளன.

இந்த நிலையில் புதிய வரிசை வரும்போது, அது சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பக்கூடும் என்றும் அமைச்சர் விஜேபால கூறியுள்ளார்.

ஒரு நாடு தனது கடவுச்சீட்டுக்களை எப்போதும் மாற்றிக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்படும் கடவுச்சீட்டு கையிருப்பு நெருக்கடி | Sri Lanka Passport Queue

இந்த விவகாரம் தீவிரமானது மற்றும் அவசரமானது என்ற வகையில், கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் சில கூட்டங்கள் நடைபெற்றன. 

எனினும், பரிந்துரைத்த தீர்வுகளுக்கு செவிசாய்க்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்  தயங்கியது, கடவுச்சீட்டு வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் பிரதிவாதியாக இருப்பதன் காரணமாகவே, திணைக்களம் தயக்கம் காட்டியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்வதற்கும், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் ஒரு சுயாதீன நிபுணர் குழுவை அமைக்க அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற தாம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.