யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கைதி

யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கைதி

யாழ். (Jaffna) சிறைச்சாலையில் இருந்தும் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (12.12.2024) காலை வழக்கொன்றுக்காக அழைத்து வரப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார்.

இக்க கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புபட்டவர் என காவல்துறை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.