காலநிலை தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை

காலநிலை தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை

 அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த தாழ்வுப் பகுதி தொடர்ந்தும் காணப்படுவதாகவும்  வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

காலநிலை தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை | Weather Warning For The Next 24 Hours Srilanka

எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் இன்று (11) நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அதோடு நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வட மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அதேவேளை காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.