தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. 

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியில் கசிந்திருந்தன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம் | Grade 5 Scholarship Exam Petition Postponedஇதனையடுத்து பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த மனு எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் வழக்கினை  ஒத்திவைத்துள்ளனர்.