குடும்ப தகராறில் பறிபோன உயிர்; கணவர் கைது

குடும்ப தகராறில் பறிபோன உயிர்; கணவர் கைது

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (10) இரவு மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கேகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் மாத்தளை, லக்கேகல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மனைவி ஆவார்.

குடும்ப தகராறில் பறிபோன உயிர்; கணவர் கைது | Wife Dies After Being Attacked By Husbandகணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை லக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.