வாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள்

வாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள்

வாட்ஸ்அப் செயலியில் புதிதாக 138 எமோஜிக்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.20.197.6 பீட்டாவில் சோதனை செயய்ப்படுகிறது.

முன்னதாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் முந்தைய வழக்கமான ஸ்டிக்கர்களுடன் சேர்த்தே வழங்கப்படுகின்றன. இவை தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தி வழங்குகின்றன.

வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்கள் மிக முக்கிய அம்சங்களாக விளங்கி வருகின்றன. இவற்றை பயன்படுத்தி பயனர்கள் தங்களது மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இது பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   

ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதை விட புதிய எமோஜிக்கள் வித்தியாசமானதாக இருக்கிறது. இதனை முதல் முறை பார்க்கும் போதே கண்டுபிடித்துவிட முடியும். இவற்றில் புதிய நிறங்கள், ஆடைகள், தலை முடி மற்றும் ஸ்கின் டோன் உள்ளிட்டவை புதுமையாக சேர்க்கப்படுகின்றன.