அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சினால் நேற்று இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை நிதி வழங்கள் தொடர்பான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.