கிளிநொச்சியில் மது போதையில் 14 வயது மகன்; தாய் உயிரிழப்பு

கிளிநொச்சியில் மது போதையில் 14 வயது மகன்; தாய் உயிரிழப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த 14 வயது மகன் அதிக மது போதையில் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது.

கிளிநொச்சியில் மது போதையில் 14 வயது மகன்; தாய் உயிரிழப்பு | 14 Year Son Drinking Alcohol Mother Dies

சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் தாயின் மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.