பதின்மவயது மாணவிக்கு சித்தி செய்த கொடுமை; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

பதின்மவயது மாணவிக்கு சித்தி செய்த கொடுமை; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

ரிதிமாலியயெத்த பகுதியிலுள்ள வீடொன்றில் 14 வயதுடைய மைனர் பாடசாலை மாணவியை தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத் தாயார் சந்தேகத்தின் பேரில் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதின்மவயது மாணவிக்கு சித்தி செய்த கொடுமை; பொலிஸார் அதிரடி நடவடிக்கை | Stepmother S Cruelty To Teenage Studentவளர்ப்புத் தாயின் கொடுமையினால் காயமடைந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்துளார்.

இந்நிலையில் கூடுதல் வகுப்பிற்குச் சென்ற சிறுமி வீடு திரும்ப தாமதமானதால் ஆத்திரமடைந்த சித்தி , வீட்டுக்கு வந்து சிறுமியை கை, கால்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

அதுடன், பக்கத்து வீட்டில் இருந்து கத்திரிக்கோலை எடுத்து வந்து சிறுமியின் தலைமுடியையும் வெட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.