இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் தேய்காயின் விலை - நெருக்கடியில் மக்கள்
இலங்கையில் அண்மைய நாட்களில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியயுள்ளது.
இந்நிலையில் கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேங்காய் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் 220 ரூபாயை தாண்டலாம் என சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் நுகர்விற்கு தேவையான அளவு தேங்காய் கிடைக்காததால், அதன் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமைக்கு தீர்வாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய தென்னை அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, அரசாங்கத்திற்கு சொந்தமான கூட்டுத்தாபனத்தின் ஊடாக 110 ரூபாவிற்கு தேங்காய் கொள்வனவு செய்யப்பட்டு சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.