திருடப்பட்ட சொத்துக்களை மீட்க அநுர அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
திருடப்பட்ட சொத்துக்கள் மீட்டல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழல்களை தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்டமூலங்கள் எதிர்வரும் காலாண்டில் சமர்ப்பிக்கப்படும் என நாடமாளுமன்ற அமர்வின் போது நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அதன் மூலம் கடன் வழங்குவோரின் நம்பிக்கை மேம்படும் எனவும், கடன் பெற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.