பணிபுரியும் போதே பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோக்கத்தர்!

பணிபுரியும் போதே பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோக்கத்தர்!

நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேளை மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் நேற்றைய தினம் (03-12-2024) காலை உயிரிழந்துள்ளார்.

பணிபுரியும் போதே பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோக்கத்தர்! | Post Office Staff Died While Working Nuwara Eliya

குறித்த ஊழியர் நேற்று வேலைக்கு வருகை தந்து அனைவரிடமும் பேசிவிட்டு மேசையில் சாய்ந்திருந்த வேளையில் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த உத்தியோகத்தர் தபால் நிலையத்தில் 14 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை பிரேத பரிசோதனையின் பின் முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.