போலி நாணயத் தாள்களுடன் 4 மாணவர்கள் கைது

போலி நாணயத் தாள்களுடன் 4 மாணவர்கள் கைது

போலி நாணயத் தாள்களுடன் நான்கு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி திகன பிரதேசத்தில் வைத்து குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 57 ஐயாயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்த போது, கடையின் உரிமையாளர்கள் போலி நாணயத்தாள்களை அடையாளம் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

போலி நாணயத் தாள்களுடன் 4 மாணவர்கள் கைது | 57 Fake 5000 Notes Recovered From Studentsஇந்த நாணயத்தாள்களை தமக்கு ஒருவர் வழங்கியதாக மாணவர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.