வாகன இறக்குமதிக்கு அனுமதி : விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடு
வாகன இறக்குமதிக்கு(vechile import) அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேவேளை இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள், கிரேன்கள், கல்லி போவர் போன்ற சிறப்பு வாகனங்கள் மற்றும் சிறிய கார்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவுள்ளது.
கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, முதல் கட்ட வாகன இறக்குமதி தாராளமயமாக்கல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சுங்க ஆவணங்களை சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் நுகர்வோருக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கு வாகன இறக்குமதியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்படவில்லை எனில், வாகனங்களின் காப்பீட்டு மதிப்பில் 3 சதவீதம் மாதாந்திர அபராதம் விதிக்கப்படும்.
மேலும், ஒருவர் தனது பெயரில் வாகனத்தை பதிவு செய்தால், அதனை மூன்று ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்பதோடு தாமதக் கட்டணம் செலுத்தாமல் எந்த வாகனத்தையும் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்ய முடியாது எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதக் கட்டணம் செலவு, காப்பீடு மற்றும் வாகன விலையின் 45 சதவீதம் ஆகும்.