போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாகப் பயிர் செய்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதன்படி ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மேலும் சில மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளன.

போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகளின் விலை அதிகரிப்பு | Prices Of Many Vegetables Including Beans

இதேவேளை. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கெரட் கிலோவொன்றின் மொத்த விலை 60 முதல் 120 ரூபாவாகும்.

லீக்ஸ் கிலோவொன்று 150 முதல் 170 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி கிலோவொன்று 200 முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும், பச்சை மிளகாய் கிலோவொன்று 190 முதல் 200 இடைப்பட்ட விலையிலும், கத்தரிக்காய் கிலோவொன்று 200 ரூபாவிற்கும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.