வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்; மாணவன் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்; மாணவன் சடலமாக மீட்பு

அம்பாறை- காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி 6 பேர் காணாமல்போன நிலையில், காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர்.

வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்; மாணவன் சடலமாக மீட்பு | Ampara Flooded Plowing Machine Student S Body

இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். இந்நிலையில் , காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கனமழைகாரணமாக காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் காணாமல்போனவர்களில் மற்றுமொரு மாணவன் சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து தீவிர தேடுதல்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.