87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய மருத்துவர்

87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய மருத்துவர்

87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களுடன் அந்தரங்கத்தில் இருந்த சுமார் 6000 மணி நேர  வீடியோ உடன் மருத்துவர் ஒருவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடான நேர்வேயை சேர்ந்த 55 வயதாகும் இவர்  நேர்வே நாட்டில் உள்ள பல கிராமங்களில் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

தொழிலில் திறமை மிக்க நபராக இருந்த போதிலும் பெண்களிடம் பழகுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவர் மருத்துவர் ஆகுவதற்கு முன்பாக பயிற்சி நிலையிலிருந்த போதே ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.

87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய மருத்துவர் | Doctor 6000 Hours Video 87Women Sex Harased

மருத்துவரான பின்னரும் இவருடைய பாலியல் தொந்தரவு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சுமார் 87 பெண்களிடம் பழகி அவர்களிடம் பாலியல் ரீதியாக மருத்துவர் தொந்தரவு செய்துள்ளாராம்.

இந்த பெண்கள் அனைவரும் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களது பலவீனத்தை பயன்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர், அது தொடர்பாக சுமார் 6000 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக இதே குற்றச்செயலை செய்து வந்த மருத்துவர் ஆர்னி பை, கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தான் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு பொலிஸார் சிக்கி உள்ளார்.

இந்த இடத்தில் விசாரணையை தீவிர படுத்திய பொலிஸார் பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய மருத்துவர் | Doctor 6000 Hours Video 87Women Sex Harased

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே 14 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

மிகவும் திட்டமிட்டு பெண்கள் புகார் அளிக்க முடியாத அளவுக்கு பாலியல் தொந்தரவுகளை அவருக்கு மருத்துவர் அளித்துள்ளார்.

தற்போது நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்துவரும் நிலையில் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்படும் போது 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நோர்வே மட்டுமின்றி ஐரோப்பாவையே உலுக்கி வருகிறது. ஐரோப்பாவில் மிக மோசமான பாலியல் தொந்தரவு வழக்காக இந்த மருத்துவரின் வழக்கு மாறி உள்ளது.