தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உயர்வடைந்த தங்க விலை இன்று (25.11.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 787,633 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,790 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 222,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Gold Price Rate In Sri Lanka World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்  22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,320 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 194,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 214,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Gold Price Rate In Sri Lanka World Market

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 196,900 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.