ஐந்து மாதங்களுக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இத்தாலியில் ஆரம்பம்!

ஐந்து மாதங்களுக்கு பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இத்தாலியில் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் தொற்றினால், டென்னிஸ் போட்டிகள் தடைப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

பெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று (திங்கட்கிழமை) இத்தாலியில் ஆரம்பமாகியுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என கடின தரையில் நடைபெறும் இத்தொடர், எதிர்வரும் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில், குரோஷியாவின் பெட்ரா மார்டிச், கிரேக்கத்தின் மரியா சக்காரி, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், எஸ்டோனியாவின் கோன்டாவெய்ட், செக் குடியரசின் வோன்ட்ரோசோவா, பிரான்ஸின் மிலாடெனோவிச் உள்ளிட்ட வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.

31ஆவது ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரில், இன்று முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.