கொழும்பில் சாரதியின் கவனயீனத்தால் பெண்ணுக்கு ​நேர்ந்த சோகம்

கொழும்பில் சாரதியின் கவனயீனத்தால் பெண்ணுக்கு ​நேர்ந்த சோகம்

கொழும்பு (Colombo)  - மஹரகம பழைய வீதியில் பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த வயோதிபப் பெண் ஒருவர் தனியார் பேருந்தில் மோதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் சாரதியின் கவனயீனத்தால் பெண்ணுக்கு ​நேர்ந்த சோகம் | Maharagama Road Accident One Injured

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.