இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்

இந்த மாதத்தின் முதல் இருபது நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 26,717 ஆகும்.

 

இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள் | Tourists Coming To Sri Lanka 120 961 Country

அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்து 41 ஆயிரத்து 676 ஆகும்.

இந்தநிலையில், கடந்த வருடம்  இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 14 இலட்சத்து 87 ஆயிரத்து 303 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.