ஆற்றில் பாய்ந்த ஜீப் வாகனம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த இளம் சகோதர்கள்!

ஆற்றில் பாய்ந்த ஜீப் வாகனம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த இளம் சகோதர்கள்!

குளியாப்பிட்டிய - ஹெட்டிபொல வீதியில் கம்புரபொல பாலத்திற்கு அருகில் ஜீப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி புஜ்கமுவ ஓயாவில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (23-11-2024) காலை இடம்பெற்றுள்ளது.

ஆற்றில் பாய்ந்த ஜீப் வாகனம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த இளம் சகோதர்கள்! | Brothers Killed As Jeep Plunges Into Bujgamuwa Oya

குளியாப்பிட்டியவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிரேன் உதவியுடன், நீரில் மூழ்கிய ஜீப் மீட்கப்பட்டதுடன், உள்ளே சிக்கியிருந்த இருவர் குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆற்றில் பாய்ந்த ஜீப் வாகனம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த இளம் சகோதர்கள்! | Brothers Killed As Jeep Plunges Into Bujgamuwa Oya

முதற்கட்ட விசாரணையில், சாலையின் வளைவுப் பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்ததாகத் தெரிகிறது.

சடலங்கள் குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.