யாழில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞன் நையப்புடைப்பு

யாழில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞன் நையப்புடைப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாள்வைத்து அட்டகாசம்செய்த இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்து இளைஞன் இன்றைய தினம் (19) வாள் மூலம் பொது மக்களுக்கு மிரட்டுதல் விடுத்த நிலையில் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது,  18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு அட்டசாசம் செய்துள்ளார்.

இதனையடுத்து,  பிடிக்கப்பட்ட இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

யாழில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞன் நையப்புடைப்பு | Youth Arrested With Sword In Jaffna

இதற்கமைய அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.