இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணித ஆசிரியர்

இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணித ஆசிரியர்

இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 54 வயதுடைய கணித ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணித ஆசிரியர் | Math Teacher Sexually Abused Two Schoolgirls

அதே பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.

சந்தேக நபர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த நிலையில் இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் இன்று (19) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.