மாணவியிடம் பேச ஆசிரியருக்கு அழைப்பு ; வவுனியாவில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு!

மாணவியிடம் பேச ஆசிரியருக்கு அழைப்பு ; வவுனியாவில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு!

வவுனியா, வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

மாணவியிடம் பேச ஆசிரியருக்கு அழைப்பு ; வவுனியாவில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு! | Teacher Called To Speak To Student Strike Vavuniyaஇதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கு ஆசிரியர் மறுப்புத் தெரிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் அன்றைய தினம் மாலை மேற்படி ஆசிரியர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற குழு ஒன்று ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நேற்று மாலை மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமக்குப் போதிய பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்று சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.