பெருந்தொகையான புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் - பலர் படுதோல்வி

பெருந்தொகையான புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் - பலர் படுதோல்வி

பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 160இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தலைமையில் சபையின் முதல் நாள் பணிகள் ஆரம்பமாகும்.

செங்கோல் வைத்த பின்னர் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் திகதி மற்றும் நேரத்தை நிர்ணயம் செய்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல், அன்றைய தினம் முதல் பணியாக பொதுச் செயலாளரால் சபையில் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 64 (1) மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 இன் விதிகளின்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பெருந்தொகையான புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் - பலர் படுதோல்வி | New Parliament To Convene On 21 November Sri Lanka

சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம் செய்வார்கள் அதனை துணை சபாநாயகர் மற்றும் துணைக்குழு தலைவர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும்.

தேர்தல் வாக்களிப்பு மூலம் 196 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களுமாக மொத்தம் 225 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்தொகையான புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் - பலர் படுதோல்வி | New Parliament To Convene On 21 November Sri Lanka

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, ரொஷான் ரணசிங்க, டக்ளஸ் தேவானந்தா, டீ.பி.ஹேரத், ரோஹன திசாநாயக்க, சரத் வீரசேகர, புத்திக பத்திரன, சன்ன ஜயசுமன, திஸ்ஸ குட்டியாராச்சி, நிபுண ரணவக்க, எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், எஸ்.எம். சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, அசங்க நவரத்ன, ஷாந்த பண்டார, பிரமித்த பண்டார தென்னக்கோன், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ், ஷசீந்திர ராஜபக்ஷ , ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார, கஞ்சனா விஜேசேகர,செல்வராசா கஜேந்திரன், ஹரின் பெர்னாண்டோ, ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய, பவித்திரா வன்னிஆராச்சி, ரஞ்சன் ராமநாயக்க, திலும் அமுனுகம, உதய கம்மன்பில, நிமல் லன்சா, பிரசன்ன ரணவீர, அஜித் ராஜபக்ச, அருந்திக்க பெர்னாண்டோ, ஜானக்க வக்கும்புர, பிரேமலால் ஜயசேகர, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சிவநேசதுரை சந்திரகாந்தன், அங்கஜன் ராமநாதன், உட்பட பலர் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.