வைபர் காணொளி மூலம் நேர வரையறையற்ற புதிய குழு காணொளி அழைப்பு முறையை அறிமுகம்
வைபர்(viber) 20பேர் காணொளி (வீடியோ) மூலம் இணையும் வகையில் நேர வரையறையற்ற புதிய குழு காணொளி அழைப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச ரீதியாக அதிகரித்து வரும் நேருக்கு நேர் காணொளி கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளுக்கு உதவும் வகையில் இந்த அழைப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கொரோனா பரவலை அடுத்து சமூக இடைவெளி என்பது தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அவசியமான குழுக்கலந்துரையாடல்கள் மற்றும் அவசியமான கூட்டங்களுக்கு இந்த வைபர் காணொளி அழைப்பு முக்கியமானதாக அமையும்.
கூட்டங்கள் மாத்திரமன்றி சமையல் வகுப்புக்கள் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும் என்று 'வைபர்' குறிபபிட்டுள்ளது.
இதேவேளை வைபர் காணொளியை இலகுவான வழியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.