வாக்களிக்கும்போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

வாக்களிக்கும்போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன.

இதனால் பலரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

வாக்களிக்கும்போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் | Instruction To Use Only Ballot Box While Voting

எவ்வாறாயினும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போதும், விருப்பு வாக்குகளை வழங்கும்போதும் புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.

எனவே உரிய முறையை பின்பற்றி அளிக்கும் வாக்கினை செல்லுபடியாகும் வாக்காக வாக்காளர்கள் மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.