நெடுங்கேணியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை: வெளியான காரணம்

நெடுங்கேணியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை: வெளியான காரணம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது.

நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 47 அகவையுடைய சுபாஜினி தயானந்தன் என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை: வெளியான காரணம் | The Teacher Died Suddenly In Nedungeniகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்த நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

அவரது  உடலில் விசம் பரவியமையே மரணத்திற்கான காரணம் எனவும், இரவு நேரங்களில் விச ஊர்வன ஏதாவது கடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.