கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்! பொலிஸார் தீவிரம்

கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்! பொலிஸார் தீவிரம்

நுவரெலியா, பொகவந்தலாவை, கொட்டியாகலை பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (03-11-2024) இடம்பெற்றுள்ளது.

கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்! பொலிஸார் தீவிரம் | Man Recovered Dead From Canal Nuwara Eliya

கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குழாய்களுக்கு நீர் இணைப்பை வழங்கும் கால்வாயிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்! பொலிஸார் தீவிரம் | Man Recovered Dead From Canal Nuwara Eliyaசடலமாக மீட்கப்பட்டவர் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.