வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

நாட்டில் சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்! | Government Decision To Import Vehicles

இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறிய அமைச்சர்,

அதற்கமைவாக எதிர்காலத்தில் முறையான நடைமுறையொன்று தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், எமது பணம் ஒரே நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க முறையான செயற்றிடம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.