ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும்: உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும்: உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுவதை ஐ.பி.எல். நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

மேலும், பெண்கள் ஐபிஎல் லீக் ரி-20 தொடர் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பான முழுமையான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஒரு அணியில் அதிகபட்சமாக 24 வீரர்கள் இடம்பெறுவர். போட்டி இரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகும்.

கொவிட்-19 தொற்றினால் வீரர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு பதிலாக பதினொருவர் கொண்ட அணியில் எத்தனை வீரர்களையும் மாற்று வீரர்களாக களமிறக்க முடியும்.

மேலும், எதிர்வரும் 26ஆம் திகதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.