கொழும்பில் பாடசாலை மாணவர் தொடருந்தில் மோதி பலி

கொழும்பில் பாடசாலை மாணவர் தொடருந்தில் மோதி பலி

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே தொடருந்தில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று ( 25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொட தொடருந்து தளத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் பாடசாலை மாணவர் தொடருந்தில் மோதி பலி | Dematagoda Train Accidentஇந்த மாணவன் பாடசாலையை முடித்து விட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக கொழும்பு கோட்டை நோக்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.