முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி!

முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி!

முல்லைத்தீவில் (Mullaitivu) கட்சி ஒன்றின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கான சுவரொட்டி ஒட்டும் போது நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம் பகுதியில் நேற்று (24.10.2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சுவரொட்டி ஒட்டிய போது யானைக்காக காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு ஒட்டுசுட்டானை சேர்ந்த 45 அகவையுடைய காசிலிங்கம் லங்காதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி! | Man Pasted The Election Poster Was Electrocuted

இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.